juli biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் ஜூலிக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரை தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம் என்று கூறிய ஜூலிக்கு, கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறியதாக செய்திகள் வெளிவந்தன. அதில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை கோகுலுடன் தொகுத்து வழங்குகிறார்.

juli

பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்று துவக்கத்தில் அனுதாபத்தை பெற்று வந்த ஜூலி பின்னர் பலரின் சர்ச்சைகளுக்கு உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு தற்போது அதிகளவில் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளது. சொல்லப் போனால் ஓவியாவுக்குப் பின்னர் ஜூலிக்குத்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அதிகம் படித்தவை:  உத்தமி படத்தில் ஜூலியின் கெட்டப்.! கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!
juli

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த ஜூலி திடீரென கலைஞர் டிவிக்கு தாவினார். இதில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர்.

 

அதிகம் படித்தவை:  நம்ம ஜூலியின் ஜிமிக்கி கம்மல் கிட்ட வர முடியுமா யாராலயாவது.!

இந்த நிகழ்ச்சிக்காக ஜூலிக்கு 3 மாதத்திற்கு மொத்தமாக 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

juli biggboss

அதாவது மாதம் ஒன்றுக்கு தலா ரூ 10 லட்சம். இது உண்மையிலேயே ஜூலிக்கு பெரிய வளர்ச்சிதான். நடுத்தர குடும்பத்தில் பிறந்து மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது ஒரு நல்ல நிலைக்குதான் வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை அவர் தக்க வைக்க வேண்டும் என்றால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். சமுத்திரகனி கூறியதை போல சிறிது காலம் அமைதியாக இருப்பது நல்லது. செய்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்.