ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு கோசம் போட்டிருந்தார் இந்த ஜூலி. இதையடுத்து “ஜல்லிக்கட்டு போராளி”, “தமிழ்ப் போராளி” என்றும் பலர் இவரை அழைக்க ஆரம்பித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அடைந்த பிரபலத்தை விட, அதிக பிரபலம் ஆனார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர், போட்டியாளர்கள் மீடியாவுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

julie biggboss
juli

அதன்படி, சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஜூலி, “விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்காக போராட மிகவும் ஆசையாக இருக்கிறது. அதுபோல், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் மீண்டும் கலந்து கொள்ளவும் எனக்கு விருப்பம் உள்ளது” என்று கூறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜுலி. ஆனால் இதற்கு முன்பே இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவர் போல வரலாறு காணாத எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

juli

ஆனால் இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சில விஷயங்கள் இவரை மற்றவர்கள் திட்டும்படி அமைந்தது. இன்றுவரை பலரும் அவரை திட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனாலும், அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி கொண்டு ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக விஜய் டிவி அவருக்கு பெரிய ஒரு பிளாட்பாரம் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

juliana

மேலும் பல்வேறு தனியர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் ரூ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்கிறார்.

ஆனாலும், அவர் கேட்கிற தொகையை கொடுக்க தனியார் தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன. இதனால் ஜூலியின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. கோடிகளில் புரள தயாராக உள்ளார்.