Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூலிக்கு நாயகனாகும் பிரபல நடிகர்.. ஆச்சரியத்தில் இருக்கும் கோலிவுட்
உத்தமி படத்தில் ஜூலிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகன் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குரல் மூலம் தமிழகத்தையே கவர்ந்தவர் ஜூலி. அவரை தேடிப்பிடித்து, தமிழ் பிக்பாஸின் முதல் சீசனில் ஒப்பந்தம் செய்தது எண்டோமால் நிறுவனம். வீட்டுக்குள் உள்ளேறிய ஜூலிக்கு வீட்டில் இருந்த ஒன்று, இரண்டு பிரபலங்களை தவிர மற்ற அனைவரும் எதிராகவே நின்றனர். ஆனால், தமிழ் மக்களோ அவருக்கு ஆதரவாகே இருந்தனர். இதனிடையில், அவரை குறை சொல்லியவர்கள் வெளியேறினர்.
வீட்டில் இருக்கும் பிறரின் அனுதாபத்தை பெற நினைத்த ஜூலி, உதவி செய்த ஓவியா மீதே பழி போட்டார். இதனால், ஓவியாவிற்கு வீட்டில் நெருக்கடி அதிகரித்தது. இதனால், நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஜூலி மீது பெரும் கோபம் உருவாகியது. அவரை அந்த வாரமே வீட்டை விட்டு வெளியேற்றினர்.
வசைகளும் ஒரு பாடம் கற்று கொடுக்கும் என்பது போல அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. டிவி தொகுப்பாளினி, விளம்பர நடிகை என பல வாய்ப்புகளை பெற்றார். இதனை தொடர்ந்து, கே7 ப்ரோடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட இருக்கும் உத்தமி படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு முதல் டைட்டில் வரை ரசிகர்களிடம் வைரலாகியது.
இந்நிலையில், ஜூலிக்கு நாயகர்கள் வேட்டை தொடங்கி இருக்கிறதாம். உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், முன்னணி தொகுப்பாளர், வெள்ளித்திரை நடிகர்கள் என 4 முன்னணி பிரபலங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் யார் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவே இருக்கும் என பேச்சுகள் அடிப்படுகிறது.
