41 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜூலி, எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ரசிகள் எதிர்ப்பு இருப்பதால் வெளியில் எங்கும் தலைகாட்டுவதில்லை.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நேர்காணலுக்காக ஜூலி சென்றுள்ளார். அப்போது, நிறுவனத்திடம் அவர் இரண்டு கண்டிஷன்களை வைத்துள்ளார்.

ஒன்று, ‘நான் செய்தி வாசிக்க மாட்டேன்’; இரண்டாவது, ‘விஜய் டி.வி-யிலிருந்து எனக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். அப்படி வந்தால் நான் சென்றுவிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளைத் தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேருவார் என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள்.