Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

மொத்த சினிமா உலகையும் மிரட்டிவிட்ட ராஜமவுலியின் RRR.. அசத்தலான ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டர் வீடியோ

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.

பாகுபலி படங்களுக்கு பிறகு தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் இணைத்தார். மேலும் இப்படத்தின் நாயகிகளாக இங்கிலாந்தை சேர்ந்த எட்கர் ஜோன்ஸ் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த அலியா பட் நடிக்கின்றனர். சமூத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் அஜய் தேவ்கனும் நடிக்கிறார்.

RRR-cinemapettai

RRR-cinemapettai

இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நடப்பதாகும் . அல்லூரி சீதாராமராஜூ (ராம்சரண்) மற்றும் கொமாரம் பீம் (ஜூனியர் என்டிஆர் ) என்கிற இரண்டு போராளி வீரர்களின் உண்மை கதையை மையமாக கொண்டே எடுக்கிறர்கள் படத்தை.

ஏற்கனவே ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு RRR படத்தில் ராம்சரணின் கேரக்டர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்னின்னிலையில் இன்று பீம் கதாபாத்திரத்தை ராம் சரண் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர். படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ராஜமவுலிக்கு மீண்டும் ஒரு ஹிட் பார்சல் என்றே தோன்றுகிறது.

Continue Reading
To Top