Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசத்தல் 6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் ! வைரலாகுது புது பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
ஜூனியர் என்.டி.ஆர்
இவர் என்.டி.ராமராவின் பேரன். ஆந்திராவில் பிரபல ஹீரோக்களில் ஒருவர். இவரது தந்தை, நடிகர் மற்றும் அரசியல்வாதியான ஹரி கிருஷ்ணா. ஜூனியர் என்.டி.ஆர் பிறப்பால் ஒரு முஸ்லிம். ஆனால் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபிறகு தன் பெயரை ‘ஜூனியர் என்.டி.ஆர்’ என்று மாற்றி இப்போது ‘தாரக்’ என்று அழைக்கப்படுகிறார்.
சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். நல்ல ரீச் கிடைத்தது இவருக்கு. காமெடி செய்வது, நீண்ட வசனங்கள் பேசுவது, டான்ஸ் என்று அசத்துவார் இவர். ஆரம்ப காலங்களில் சற்றே பருமனாக இருந்த இவர் அதிரடியாக உடம்பை குறைத்து ஸ்லிம் அண்ட் பிட் ஆக மாறினார்.
Finally, Abhay has stopped closing my eyes. He’s all grown up. Still gives me my first and most precious birthday wishes though ? pic.twitter.com/e7V7pJCafW
— Jr NTR (@tarak9999) May 19, 2018
மே 20 இவரின் பிறந்தநாள். தன் 35 வயதில் அடி எடுத்து வைக்கிறார். அதனை முன்னிட்டு இவர் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தை த்ரி விக்ரம் இயக்குகிறார். பூஜா ஹெகிடே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ஹரிக்கா , ஹாஸினி கிரேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.
அரவிந்த் சம்மேதா என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் போஸ்டரில் கத்தியுடன், தன் 6 பேக் உடம்பு தெரியும் படி ஆக்ரோஷமாக நடப்பது போல் வைத்துள்ளனர் .

Jr NTR
இந்த போஸ்டரை இவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
