மாமியார் படத்தில் மருமகன் ! JR 24 !

ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில்  உருவாகியிருக்கும்   முதல் தமிழ் ’ஸ்பேஸ்  திரில்லர்’ படம் “டிக் டிக் டிக்” அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக  சங்கமித்ராவில் நடிக்கவிருக்கிறார். அந்த பட ஷூட்டிங் தாமதமாவதால் குறுகிய இந்த இடைவெளியில் அடுத்த படம் நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.  கார்த்திக் தங்கவேல் இயக்குனர் சரணின் உதவியாளர் ஆவார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

தெலுங்கில் முன்னணி  நடிகை ராசி கன்னா.  தமிழில் ‘இமைக்கா நொடிகள்’  இவரது முதல் படம். நயன்தாரா, அனுராக் காஷ்யப்  நடிக்கும் அந்த படத்தில் அதர்வா ஜோடியாக  நடித்துள்ளார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். ஆர்ட் லால்குடி இளையராஜா.

இப்படத்திற்கு லொகேஷன் தேடலில் உள்ள ஆர்ட் டைரக்டர் சில போட்டோக்களையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுஜாதா விஜயகுமார், என்றால் சின்னத்திரையில் மிக பிரபலம். சீரியல் தயாரிப்பாளர். இவரின் மகளான ஆர்த்தியை தான் நம் ஜெயம் ரவி திருமணம் செய்துள்ளார். இவர்கள் தங்கள் ஹோம் மூவி மேக்கர்ஸ் பாணரில் இதற்க்கு முன் சுந்தர்.சி நடிப்பில் ‘வீராப்பு’ படத்தை தயாரித்துள்ளனர். மீண்டும் நீண்ட  இடைவெளிக்கு பின் சினிமா பக்கம் வந்துள்ளார்.

Comments

comments