மொழி திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது.இந்த திரைபடத்தை இயக்குனர் ராதாமோகன் இயக்கினார்,படத்தில்  பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Jo

இந்த நிலையில் ஜோதிகாவை மீண்டும் இயக்க வாய்ப்பை பெற்றுள்ளார் ராதாமோகன், ஹிந்தி திரைப்படமான தும்ஹாரி சுலு என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் இந்த படத்தில் நடிக்க தான் ஜோதிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படத்தில் ஜோதிகா நடுத்தர வயது பெண்ணாக வருகிறாரர் படத்தில் ஹீரோயின் ரேடியோ ஜாக்கியாக சாதிக்க வேண்டும் என்ற குறிகோளுடன் களம் இறங்குகிறார், அவரின் இந்த குறிக்கோளுக்கு வரும் தடைகளை எப்படி உடைக்கிறார், கடைசியில் ரேடியோ ஜாக்கியாக ஆனாரா என்பது தான் கதை.

படத்தை தனஞ்ஜெயன் தான் தயாரிக்கிறார் தற்பொழுது திரையுலக ஸ்ட்ரைக் முடிந்துள்ளதால் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க இருப்பது வேற யாரும் இல்லை வீரம் படத்தில் அஜித்திற்கு மூத்த தம்பியாக நடித்த நம்ம விதார்த் தான்.