ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெளியான பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வந்துள்ள நாச்சியார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

jothika

இந்த படத்தின் வெற்றியின் மூலம் அடுத்த படத்திற்கு நடிக்க ஜோதிகா முடிவு எடுத்துள்ளார். வித்யா பாலன் நடித்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘தும்ஹரி சுளு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாயகிவுள்ளது.

மேலும் தும்ஹரி சுளு இந்த படத்தில் வித்யாபாலன் ரேடியோ ஜாக்கியாக நடித்திருப்பார், அதே கதாபாத்திரத்தில் தான் ஜோதிகா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை மொழி, பொன்னியின் செல்வன், அழகிய தீயே ஆகிய படங்களை இயக்கிய ராதாமோகன் அடுத்து ‘தும்ஹரி சுளு’ படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.