சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா. வயது 31. இந்திய அணிக்காக 223 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக, சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாடினார். அதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

RAINA

கட்டாயமாக்கப்பட்டுள்ள யோ-யோ டெஸ்ட் சோதனையில் தேர்ச்சி பெறாததே ரெய்னா இந்திய அணியில் இடம்பெற முடியாததற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் கடின பிட்னெஸ், உணவு கட்டுப்பாடு , தீவிர பயிற்சி செய்து ரெய்னா இந்தச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.

En route Joburg . ✈️ can’t wait to get started . ?

A post shared by Suresh Raina (@sureshraina3) on

இவர் தென் ஆப்பிரிக்கா கிளம்பும் பொழுது துபாய் ஏர்போர்ட்டில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். ராகுல் மற்றும் உனட்கட் இவருடன் இருந்தனர்.

AMIR RAINA

இந்த டீவீட்டுக்கு பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் அமீர் பதில் ட்வீட் போட்டார். ” குட் லக் ப்ரோ. நன்றாக விளையாடுங்க. ” என்பது தான்.

மேலும் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜோன்ட்டி ரோட்ஸ் ” துபாய் ஏர்போர்ட்டில் உன்னை பார்க்காமல் விட்டு விட்டேன். தன்னம்பிக்கையுடன் என்ஜோய் செய்து விளையாடு. உனது கடின உழைப்புக்கு பலன் கண்டிப்பாக கிடைக்கும் .” என்று டீவீட்டியுள்ளார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு திரும்பியதில் ரசிகர்கள் மட்டுமன்றி பல கிரிக்கெட் வீரர்களும் இவரின் கம் பேக்கிற்காக ஆர்வமாக உள்ளனர். முதல் போட்டி இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.