ராஜு முருகனின் ஜோக்கர் திரைப்படம் அனைவரது பாராட்டை பெற்றதுடன் ஓரளவு கலெக்ஷனும் செய்தது. இன்னும் சில ஊர்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை ஜப்பானில் திரையிடுகின்றனர். ஜப்பானில் உள்ள சிபா கென் நகரில் உள்ள திரையரங்கில் மதியம் 3 மணிக்காட்சியாக இன்று முதல் திரையிடுகின்றனர்.

ஜப்பான் வாழ் தமிழர்களுக்காக இந்த திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.