சென்ற ஆண்டு ராஜூ முருகன் இயக்கத்துல குரு சோமசுந்தரம் நடிப்புல வெளியான சமூக விழிப்புணர்வு படம் ஜோக்கர்.

இந்த படத்துல நடிச்ச குறு சோமசுந்தரம் அவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்துச்சு. இதுக்கு முன்னாடி ஆரண்ய காண்டம், கடல், ஜிகர்தண்டா, தூங்காவனம் போன்ற பெரிய படங்கள்ல நடிச்சுருந்தாலும் ஜோக்கர் படத்திற்கு பிறகே இவரது நடிப்பின் ஆளுமை மக்களை முழுமையா சென்றடைந்தது.

இந்த படத்துல சமூகத்தில் நிகழும் அனைத்து பிரச்சனைகளும் வெளிப்படையாய் பேசப்பட்டுச்சுங்க. உதாரணத்துக்கு மணற்கொள்ளை, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்களின் ஆதிக்கம், கழிவறை ஊழல், ஆளுங்கட்சியின் குற்றங்கள், எதிர்க்கட்சியின் குற்றங்கள்னு எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே படத்தில் தெளிவாக மக்களை சேரும்வண்ணம் திரைக்கதை அமைக்கப்படிருந்தது.

இந்த படத்திற்கு ஏற்கனவே பின்வரும் விருதுகள் கிடைத்துள்ளன

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது,ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில் – சிறந்த தயாரிப்பிற்கான விருது மற்றும் சிறந்த வசனத்திற்கான விருது
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் – சிறந்த திரைப்பட விருது
Zee Cine விருது விழாவில் – சிறந்த தமிழ் திரைப்பட விருது
தேசிய திரைப்பட விழாவில் – சிறந்த தமிழ் Feature Film விருது, சிறந்த ஆண் பாடகர் விருது
Behindwoods Gold Medal விழாவில் – சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த வசனகர்த்தா விருது, சிறந்த திரைப்பட விருது
சிறந்த திரைப்படத்திற்கான தென்னிந்திய film fare விருது மற்றும் பின்னணிப்பாடகர் விருது

இப்போது இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாய் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்படவிழாவில் இப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் M.S. தோனி, சுல்தான், பிங்க் போன்ற படங்களும் தேர்வாகியுள்ளன.

prakashraj guru somasundaramசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மறக்க முடியா தமிழ் சினிமாக்களில் ஜோக்கர் படமும் ஒன்று. சினிமா பேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.