fbpx
Connect with us

ஜோக்கரை திருட்டுவிசிடியில் பார்த்தவர்கள் செய்த வேலையா இது?

ஜோக்கரை திருட்டுவிசிடியில் பார்த்தவர்கள் செய்த வேலையா இது?

ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘ஜோக்கர்’ படத்தை திருட்டு விசிடி-யில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தும்படி வங்கி கணக்கைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினார்கள். அப்போஸ்டருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கில் பலரும் பணம் செலுத்தியுள்ளனர். தற்போது வரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கி கணக்கில் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் பிரபு கூறியுள்ளார்.

மேலும் அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் அனுப்பும் பணத்தை வைத்தே ஒரு கழிப்பறையை கட்டிவிடுவோம் என பிரபு குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top