TV | தொலைக்காட்சி
மீண்டும் ஒன்று சேரும் பியார் பிரேம காதல் ஜோடி..
சின்னத்திரையில் பல நட்சத்திரங்கள் நடித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. சினிமா பிரபலங்கள் கமலஹாசன், ஸ்ருதிஹாசன், பிரசன்னா, சூர்யா, விஷால், மற்றும் வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் இப்பொழுது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டு வருகின்றனர். விஷால் சன் டிவியில் தொகுப்பாளராக வரும் நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இதேபோல் ஸ்ருதிஹாசன் என்டர்டைன்மென்ட் செய்யும் நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் பெயர் ‘ஹலோ சகோ’ அதன் விளம்பர வீடியோவை சன் டிவி வெளியிட்டது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் ஒரு நடிகரும் அவருடைய நெருங்கிய நண்பரும் இருவருக்கும் இருக்கும் நட்பின் வெளிப்பாட்டை மையமாகக் கொண்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.

hellosago-shruti
helosago-shrithihasan
பிக்பாஸ் 1 & 2 ஸ்ருதிஹாசனின் தந்தை கமலஹாசன் மிக பிரம்மாண்டமாக விஜய் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. இப்போது மகளும் தந்தையுமாக களம் இறங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி கமலஹாசன் கூறும்போது 10 படங்களில் நடித்த ஒரு பேரும் புகழும் பிக் பாஸ் இன் மூலம் எனக்கு கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
இந்த வாரத்தில் பிக்பாஸ் புகழ் ‘பியார் பிரேம காதல்’ படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா கலந்து கொள்ளவுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் நட்பு மற்றும் காதலை பதிந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதிஹாசனின் இந்த நிகழ்ச்சி வெற்றியடைய சினிமா வேட்டையின் வாழ்த்துக்கள்.
