Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.!
பிரஷாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜானி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது.தியாகராஜன் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்சினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ஜானி.
கள்ள நோட்டுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இதனால் ஜானி படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது, அதே சமயம் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெற்றி செல்வன் இயக்கியுள்ள ஜானி படத்திற்கு ரஞ்சன் துரையின் பின்னணி இசை அமைக்க பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள சரவணன் என்பவர் எடிட்டிங் பணிகளை கவனித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
