Videos | வீடியோக்கள்
இணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.!
ஜானி ட்ரைலர்.!
பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜானி படத்தின் ட்ரைலர் இணையத்தை திணறடித்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சாக்லேட் பாயாக வலம் வருபவர் பிரசாந்த். இவர் தற்போது தன்னுடைய அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிப்பு, கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள ஜானி படத்தில் நடித்துள்ளார்.

johnny-trailer
இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதிலும் குறிப்பாக எந்தவித ப்ரோமோஷனும் இல்லாமல் யூ ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து விதமான சமூக வலையதள பக்கங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
யூ ட்யூபில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் மூலம் பிரசாத்தின் ஜானி படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிய வருகிறது.
மேலும் ரிலீஸ்க்கு பிறகு இப்படம் கோலிவுட்டில் நிச்சயம் பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுறது.
