fbpx
Connect with us

Cinemapettai

ஜானி டெப் இல்லாமல் உருவாகும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்.. சம்பளத்தை கேட்டு மயக்கம் போட்டு விழுந்த தயாரிப்பாளர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜானி டெப் இல்லாமல் உருவாகும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்.. சம்பளத்தை கேட்டு மயக்கம் போட்டு விழுந்த தயாரிப்பாளர்

ஹாலிவுட்டில் ஹிட்டாகும் சூப்பர் ஹீரோ படங்களில் அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ச்சியாக உருவாவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதேபோல்தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்(Pirates of the Caribbean) படம் தொடர்ச்சியாக பல பாகங்களில் உருவானது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் வெளியான அனைத்து பாகங்களும் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஜானி டெப்(Johnny Depp)என்பவர் தான். அவருக்கு கேப்டன் ஜாக் ஸ்பேரோ எனும் அடைமொழியும் உள்ளது.

கேப்டன் ஜாக் ஸ்பேரோ எனும் பெயருக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கடற்கொள்ளையர்களை பற்றி கற்பனை கதையாக உருவாகிய அந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

தற்போது அந்த படத்தின் அடுத்த பாகம் தயாராக உள்ளது. ஆனால் கேப்டன் ஜாக் ஸ்பேரோ இல்லாமலேயே அந்த படத்தை உருவாக்க முடிவு செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

அதற்கு காரணம் ஜாக் ஸ்பேரோ கேட்ட சம்பளம் தான் என்கிறது ஹாலிவுட் சமாச்சாரம். கேப்டன் ஜாக் ஸ்பேரோ சுமார் 700 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்து விட்டதாம்.

தற்போது கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்திற்கு பதிலாக ஒரு நடிகையை நடிக்க வைக்க உள்ளார்களாம். ஏன் என கேட்டதற்கு ஜானி டெப்புக்கு வயதாகி விட்டது என சப்பைக் காரணம் கட்டியுள்ளார்கள். ஹாலிவுட் பிரபலமான நடிகை மார்க்கெட் ராபி என்பவர் தான் ஜானி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கேப்டன் ஜாக் ஸ்பேரோ இல்லாத பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், பீஸ் இல்லாத பிரியாணி போலத்தான் என இப்போதே கமெண்ட்டுகள் பறக்க ஆரம்பித்து விட்டன.

Continue Reading
To Top