சினிமாவில் எனக்கு குருநாதர் இவர் தான்.. வேம்புலியின் வெற்றி ரகசியத்தை உடைத்த சார்பட்டா ஜான்!

சமீபத்தில் வெளியான இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது சார்பட்டா திரைப்படம். கபிலன் மட்டுமல்லாது ரங்கன் வாத்தியார் வேம்புலி டான்சிங் ரோஸ் என அனைவரையும் தனித்தனி ஹீரோக்களாக அழகுபடுத்தி இருப்பார் இயக்குனர்.

சமூக வலைகளிலும் தனித்தனியே கொண்டாடப்படும் வேம்புலி டான்சிங் ரோஸ் மிரட்டல் தருகிறார்கள். வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் சில சேனல்களுக்கு பேட்டியளித்தும் வருகிறார்.

அவ்வாறான ஒரு பேட்டியில் அவர் பேசுகையில் தல அஜித் தான் எனக்கு உண்மையான குருநாதர் என்று கூறினார். வீரம் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்த ஜானுக்கு அந்த படம் தந்தது தான் திருப்புமுனை என்கிறார்.

ajith-kumar-1
ajith-kumar-1

வீரம் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித் தன்னோடு உரையாடிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜான். என்னை சாப்பிட்டீர்களா என்பார் தல இல்லை எனில் சாப்பிட்டு வாங்க நான் காத்திருக்கிறேன் என்பாராம்.

வாழ்வில் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினாராம் தல மேலும் எல்லாம் நேரம் தான் எல்லாவற்றுக்கும் என்று கூறினாராம்.வெற்றி தோல்விகளை பெரிதும் யோசிக்காமல் எடுத்த காரியத்தை கச்சிதமாய் முடிக்கும் வரை கடின உழைப்பை தர வேண்டியது நம் கடமை என்றும் கூறினாராம்.

நீங்களும் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் கூறினாராம். இப்போது சாரபட்டா வெற்றி குறித்து பேசுகையில் இந்த வேம்புலி கேரக்டரையே தல அஜித்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார் ஜான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்