Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகத்தை நோக்கி படையெடுத்து வரும் அதிரடியான வேலை வாய்ப்புகள்.. மட்டற்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள்!
தற்போது தமிழகத்தில் டாட்டா நிறுவனம் ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது 5000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஏற்கனவே ஐபோன்- 11 போன்களை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது டாட்டா நிறுவனம் ஐபோன்களின் பாகங்களைத் தயாரிக்க ஆப்பிள் நிறுவனத்துடன் கூட்டு சேர உள்ளது.
மேலும் டாட்டா நிறுவனம் ஏற்கனவே 500 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் மூலமாக ஒரு தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தகவல்களை குறித்து இதுவரை டாட்டா நிறுவனமும் தமிழ்நாடு அரசும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இந்த புதிய திட்டத்திற்காக போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் 18,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனவே, இவ்வளவு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை கேட்ட தமிழக இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
