Reviews | விமர்சனங்கள்
கோமாளி அல்ல சூறாவளி – ஜோக்கர் திரைவிமர்சனம் !
டாட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்வின் ஃபோனிக்ஸ் நடிப்பில் அதிக அளவு எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி உள்ள படமே ஜோக்கர். DC யின் தறிகெட்டு திரியும், எதிர்க்கும் அடங்காதவனே இந்த ஜோக்கர். பேட் மேனுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவன். சீஸர் ரொமெரோ, ஜாக் நிக்கல்சன், ஹீத் லெட்ஜர் என இந்த ரோலில் வெவேறு பரிணாமங்களில் அசத்தியுள்ளார். இத்தகையை சவாலான ரோலில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஃபோனிக்ஸ் நியாயப்படுத்தினாரா இல்லையா என வாங்க பார்ப்போம் …
கதை – 1980 தான் கதைக்களம். கோத்தம் நகரம் பெரிய அழிவையும், பொருளாதார பாதிப்பையும் அடைந்துள்ள சூழல். மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் தன் அம்மாவுடன் வசித்து வருகிறான். இவனுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் துளியும் சம்மந்தம் இல்லமால் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சினையே மிக கொடியது.
ஜோக்கர் வேடம் அணிந்து கடைக்கு வெளியில் நிற்பது, அடுத்தவரை குஷி படுத்துவது என்ற வேலையில் உள்ளான். எனினும் ஸ்டாண்ட் – அப் காமெடியனாக வரவேண்டும் என்பதே நோக்கம், அதனை நோக்கி உழைத்தும் வருகிறான். அடிக்கடி தாமஸ் வயன் குடும்பத்துக்கு லெட்டர் போடுவதும், பதில் வராதா என காத்திருக்கும் அம்மா என நகர்கிறது கதை.
கையில் துப்பாக்கி கிடைக்க, வேலை பறிபோக, மூன்று கொலைகளை செய்ய, எதிர் வீட்டு பெண்ணுடன் காதல் ஏற்பட, தன் அப்பா யார் என்பதனை அறிய நேரிட என பல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட இவன் அடுத்தடுத்து செய்யும் செயல்கள், கோத்தம் நகரில் வெடிக்கும் புரட்சி, ஆர்தர் எவ்வாறு ஜோக்கர் ஆக மாறுகிறான் என பல திருப்பங்களை பெற்றுள்ளது இப்படம்.
சினிமாபேட்டை அலசல் – சீரிஸ் அல்லது பார்ட் வகையறாவாக ஆர்மபிக்கப்ட்ட படம் கிடையாது இந்த ஜோக்கர். இயக்குனரும் – ஹீரோவும் வித்யாசமான காம்போ தான். டார்க் ஜானர் காமிக் வகையறா. பேட்மேன் படங்களில் வெறித்தனமான வில்லன் தான் ஜோக்கர். சூப்பர் பவர்ஸ் கிடையாது இவனுக்கு, எனினும் அடுத்த என்ன செய்வான் என யாராலும் ஊகிக்க முடியாதவன். அப்படிப்பட்ட ஜோக்கர் யார் என சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள படமே இது.
நடிப்பு, மேக்கிங், இசை, திரைக்கதை என அனைத்துமே பிளஸ் தான். கனகசித்திமாக நிறுத்தி நிதானமாக அந்த கதாபாத்திரத்தின் மனநிலை, சமூகம் ஒருவனை கொண்டு செல்லும் சூழல் என அசத்தியுள்ளார்.
எனினும் படமாக பார்க்க நன்றாக இருப்பினும், காமிக்ஸ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தான். ஜோக்கரின் முன் கதை, ஆனால் Batman: The Killing Joke; The Man Behind The Red Hood, இதெல்லாம் விட்டு வேறுபட்டே உள்ளது. எனினும் இது இன்ற நவநாகரிக ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட கமெர்ஷியல் கலவையான படம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – வித்தியாசமான ஜானரில் படம் பார்க்க செல்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் இப்படம். தன் அம்மாவை ஏமாற்றியவன், சமூகத்தில் நடக்கும் அநீதி என அனைத்துக்கும் எதிராக நிற்பவன் போலவே இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 18 + வயதுள்ளவர்களுக்கு மட்டுமே இதனை படமாக மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சினிமாபேட்டை ரேட்டிங் –
நடிப்பு, மேக்கிங் என்பதற்கான ரேட்டிங் – 4 / 5
கதை, திரைக்கதைக்கான ரேட்டிங் – 2.75 / 5
