இயக்குனர் பாலா என்றாலே நடிகர் நடிகைகள் தெறித்து ஓடுவார்கள்,ஏன் என்றால் பாலாவின் கதை அப்படி இருக்கும் சில கட்டுபாடுகளும் இருக்கும் அதனாலையே நடிகை,நடிகர் எல்லாம் தெறித்து ஓடிவிடுவார்.தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் கிரிமினலாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பது குறித்து ஜி.வி.பிரகாஷிடம் கேட்டபோது, “நாச்சியார் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்போதைக்கு இந்தப் படத்தை பற்றி எதுவும் சொல்லமுடியாது. பாலா சாரிடம் ஒவ்வொரு சீனில் நடிப்பதும் கஷ்டமான விஷயம். சும்மா போய் நடித்துவிட்டு வந்துவிட முடியாது.

ஒவ்வொரு சீனுக்கும் கடினமாக உழைப்பார். கேரக்டர்களை உருவாக்குவதிலும் சரி, உண்மைக்கு நெருக்கமான காட்சிகளைப் படத்தில் வைப்பதிலும் சரி, அவர்தான் அதில் மாஸ்டர்” என்றார்.