அஜித், விஜய் வழியில் ஜீவாவின் பிரியாணி விருந்து!

Jiiva-Pokkiriraja-Biriyani-Supply-to-CoWorkersஅஜித் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அந்த படத்திற்காக பணிபுரிந்த அத்தனை தொழில்நுட்பகலைஞர்களுக்கும் தன் கைப்பட பிரியாணி சமைத்து விருந்து கொடுத்து அசத்துவார். அவருக்கு அடுத்து இப்போது சமீபகாலமாக விஜய்யும் இந்த பிரியாணி விருந்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவர்களுடைய வரிசையில் தற்போது ஜீவாவும் இணைந்துள்ளார். ஜீவா தற்போது ‘போக்கிராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். இந்த பாடல் காட்சி ஜீவாவின் பிறந்தநாளன்று படமாக்கப்பட்ட நிலையில், ‘போக்கிரி ராஜா’ படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் முன்னிலையில், ஜீவாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதையடுத்து, ஜீவா, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார். ‘போக்கிரிராஜா’ படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார். இமான் இசையமைத்து வருகிறார். சிபிராஜ், மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகி பாபு, சுஜாதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.

Comments

comments

More Cinema News: