அட ஆமாங்க நீங்க படிச்ச தலைப்பு சரி தான். ஆனால் ஹீரோ அவதாரத்தை அவர் தமிழ் திரையுலகில் அல்ல தெலுங்கு சினிமாவில் எடுக்கிறார்.

ஜித்தன் ரமேஷ்

ஜீவாவின் சகோதரர். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது கெஸ்ட் ரோல் வரை நடித்துவிட்டார். இங்கு நம் கோலிவுட்டில் அவர் கிளிக் ஆகவில்லை என்பது தான் உண்மை.

அதிகம் படித்தவை:  வெளியானது பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் "9 " மலையாள பட மோஷன் போஸ்டர் !
Jithan Ramesh – Okate Life

இந்நிலையில் தெலுங்கில் “ஒக்கடே லைப்” என்ற படத்தில் ஸ்ருதி யுகேல் என்பவருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். வெங்கட் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை ஜீவா வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ரமேஷ் காங்ஸ்டர் ஆக நடிக்கிறாராம். டெக்னாலஜி வளர்ந்ததால் மனித உறவுகளின் முக்கியத்துவம் எவ்வாறு இழந்து வருகின்றது என மெஸேஜும் உள்ளதாம் இப்படத்தில்.

அதிகம் படித்தவை:  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் போலீஸ் ஆக்ஷன் படம்: ஆஃபீசர் டீஸர் !