Connect with us
Cinemapettai

Cinemapettai

jithan-ramesh-bigg-boss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கருப்பு நிலாவை கதறியபடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஜித்தன் ரமேஷ்.. வெறியேறிய ரியோ!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.

இந்த சீசன் மற்ற சீசன்களை எல்லாம் காட்டிலும் காமெடி, பாடல், டான்ஸ் என சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் அதிகம் இருக்கும் கன்டஸ்டன்ட்களை களமிறக்கி  விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது விஜய் டிவி.

அதில் முக்கியமாக அறந்தாங்கி நிஷா பிக்பாஸ்  வீட்டையே கலகலப்பாக வைத்திருக்கிறார். அப்படியிருக்க தற்போது ஜித்தன் ரமேசும் ஆரியும் சேர்ந்து பிக் பாஸ்  வீட்டின் கருப்பு நிலாவான நிஷாவை தேமிதேமி அழுக வைத்துள்ளனர்.

ஏனென்றால், ஃப்ரீ பாஸ் டிக்கெட்டை வைத்திருக்கும் ஆஜித்துக்கு, அதை எப்படி கவனமாக கையாள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக ஜித்தன் ரமேஷ் டிக்கெட்டை ஆஜித்துக்கு தெரியாமல் எடுத்துள்ளார்.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத நிஷாவிடம்  நம்பிக்கையுடன் ஜித்தன் ரமேஷ்  அந்த டிக்கெட்டை   கொடுக்க, யாரும் எதிர்பாராத நேரத்தில் நிஷா அதை ஆஜித்துக்குகே திரும்பக் கொடுத்துவிட்டார்.

இதனால் ஜித்தன் ரமேஷ் கோபத்தின்  உச்சிக்கே சென்றுவிட்டார்.

அதன்பின்  ஜித்தன் ரமேசும் ஆரியும்  அஜித்துக்கு நல்லது செய்ய தான் நினைச்சாங்க என்பதை புரிந்து கொண்ட நிஷா கண்கலங்கியபடி ரமேஷிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

ஆனால் ரியோ நிஷாவிடம் ‘நீ இவ்வளவு சீரியஸா எடுத்துட்டு அழுகனும்னு அவசியம் இல்ல ஃப்ரீயா விடு’ என நிஷாவின் அழுகையை பொறுத்துக் கொள்ளாமல்  வெறியேறினார் ரியோ.

அதன்பின்  ஒரு வழியாய்  ஜித்தன் ரமேசும்  ஆரியும் நிஷாவுடன் சமாதானமானார்கள்.

‘விளையாட்டா ஆரம்பிச்சது வினையா முடிஞ்சிருச்சுசே!’ என்று நிஷாவை ரசிகர்கள் பரிதாபமாக பார்த்து வருகின்றனர்.

aranthangi-nisha

aranthangi-nisha

Continue Reading
To Top