Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனாலதான் தர்ஷன் விட்டுட்டு போனாரோ.! பிக்பாஸ் வீட்டில் அராத்து பண்ணும் சனம் செட்டி
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிறது. இதில் 16 பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர்.
நேற்று முதல் முதலாக போட்டியாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு போட்டியாளர் நான்கு பேரை தேர்வு செய்து இரண்டு பேருக்கு ஹாட் சிம்பிள் போட்ட முத்திரையை குத்தி, பிடித்தமான 2 நபரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் ஹாட் ப்ரோக்கன் சிம்பிள் கொண்ட முத்திரையை பிடிக்காத 2 நபருக்கு குத்த வேண்டும்.
அந்த சமயத்தில் சனம் ஷெட்டியை “நீங்கள் வந்த நாளிலிருந்தே எல்லோரிடம் நடிப்பதாக தெரிகிறது” என்று முகத்திற்கு நேராகவே ஜித்தன் ரமேஷ் மற்றும் கேப்ரியலா இருவரும் ஓப்பனா சொல்லிட்டு ஹாட் ப்ரோக்கன் சிம்பிளை சரமாரியாக குத்தினர்.

sanam-shetty-cinemapettai
இதனால சனம் ஷெட்டியின் முகம் சுருங்கிவிட்டது. இவர் ஏற்கனவே சீசன் 3 போட்டியாளரான தர்ஷனால் ஏமாற்றப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சனம் ஷெட்டி மாடல் அழகியாகவும், சினிமாவில் சில படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது சனம் ஷெட்டியை சக போட்டியாளர்கள் நடிப்பதாக கூறியிருப்பது வரும் நாட்களில் அவர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
