ஜியோ இணைய சேவை வந்தது.. பல அதிரடி திட்டங்கள்.. ஏர்டெல், வோடாபோன் எல்லாம் வீட்டுக்கு போலாம்

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது என்ன திட்டம் என்பதை பார்க்கலாம்.

அண்மைக்காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம். தற்போது ஜிகா ஃபைபர் எனும் சேவையை தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

ஜிகா ஃபைபர் பெறுவதற்கு முன்பதிவு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பெரிய நகரங்களில் மட்டும் செயல்படுத்துவதாக இருந்த திட்டம் தற்போது வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப வசிப்பவர்களின் எண்ணிக்கை பொருத்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

ஜியோ வின் ஜிகா ஃபைபர் சேவையின் மூலம் இன்டர்நெட் பெறுவதற்கு முன் பணமாக 4,500 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் ஆறு மாதம் இலவசம் அதன் பின் மாத கட்டண அடிப்படையில் 600 ரூபாய் செலுத்தினால் லேண்ட்லைன், டிவி ஆகிய சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆயிரம் ரூபாய் அதிகமாக செலுத்தினால் வீடு முழுவதும் ஸ்மார்ட்போன், லேப்டாப் என 40 கேட்ஜெட்ஸ்களை இணையத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஜியோவின் ட்ரிப்பிள் காம்போ ஆஃபரில், டிவி செட்டாப் பாக்ஸில் 600 சேனல்கள் வரையில் பார்க்க முடியும்.

ஏற்கனவே ஜியோ வந்தவுடன் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்த ஜியோ வின் புதிய திட்டத்தால் ஏர்டெல், வோடாபோன் மற்றும் பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் வருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Comment