ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகையின் கீழ் மும்மடங்கு கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேஷ்பேக் சலுகை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ 100 சதவிகித கேஷ்பேக் வழங்கியது. இதை தொடர்ந்து இம்முறை அறிவித்துள்ள புதிய திட்டத்தில் மும்மடங்கு கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்யும் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 100 சதவிகிதம் கேஷ்பேக் சேர்த்து ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வழங்கப்பட்டது.

jio-cashback

முன்னதாக அமேசன் பே, பேடிஎம், போன்பெ, மொபிகுவிக் மற்றும் ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ரூ.300 மதிப்புடைய கேஷ்பேக் வழங்குகிறது. சமீபத்தில் ஆக்சிஸ் பே நிறுவனத்துடன் இணைந்து ரூ.100 கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.1,899 மதிப்புடைய வவுச்சர்களை வழங்க பல்வேறு முன்னணி இணைய வர்த்தகர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது.

cashback

ஜியோ அறிவித்துள்ள மும்மடங்கு கேஷ்பேக் முழு விவரங்கள்:

– ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகித கேஷ்பேக் அதவாது ரூ.400 (ரூ.50X8) வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் கேஷ்பேக் வவுச்சர்களை நவம்பர் 15-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும்.

– அமேசான் பே, ஆக்சிஸ்பே, ஃப்ரீசார்ஜ், மொபிகுவிக், பேடிஎம் அல்லது போன்பெ உள்ளிட்ட வேலெட்களை கொண்டு ரீசார்ஜ் செய்யும் போது உடனடி கேஷ்பேக் ரூ.300 வரை பெற முடியும்.

reliance jio

– ஜியோ சிறப்பு வவுச்சர்கள் ஏஜியோ, யாத்ரா மற்றும் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளங்களிலும் வழங்குகிறது. ஏஜியோ வவுச்சர் வாடிக்கையாளர்கள் ரூ.1,500க்கும் அதிகமாக பொருட்களை வாங்கும் போது ரூ.399 வரை தள்ளுபடி பெற முடியும்.

இத்துடன் யாத்ரா தளத்தில் விமான பயணச்சீட்டுகளை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடி மற்றும் ஒருவழி பாதை டிக்கெட்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

jio-cinemapettai
reliance-jio

ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளத்தில் ரூ.1999க்கும் அதிகமாக பொருட்களை வாங்கும் போது உடனடி தள்ளுபடி ரூ.500 வரை வழங்கப்படுகிறது. அனைத்து வவுச்சர்களும் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கும்.

தீபாவளி மாதத்தில் ஜியோ சலுகை திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சவிகிதம் கேஷ்பேக் மற்றும் புதிய சலுகைகள் நவம்பர் 10-ம் தேதி நவம்பர் 25-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே. இந்த கேஷ்பேக் சலுகைக்கு பின்னாடி எதாவது சதி திட்டம் இருக்குமோ என்று எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.