ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியதும், 4ஜி வேகம் குறைக்கப்படும். மற்ற திட்டங்களில் தினசரி டேட்டா பயன்பாடு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.யாக குறைக்கப்படும். ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.reliance-jio

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டத்தின் ஒரே நன்மை கூடுதல் டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எவ்வித ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும். எனினும் நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும்.

மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், அன்லிமிட்டெட் கணக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாய்ஸ் கால் அளவு ஒரு மணி நேரத்தை கடக்கும் போது அழைப்புகளில் இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.mukesh-ambani-jio

ரிலையன்ஸ் ஜியோ எண் கொண்டு எந்த நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டாலும் இதே நிலை ஏற்படும் என்றும், இவ்வாறான இடையூறுகள் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அழைப்புகள் இந்த காலக்கெடுவை நீளும் பட்சத்தில் அந்த நாளில் மற்ற அழைப்புகள் மேற்கொள்ள முடியாது.

ஒருவேளை தொடர்ந்து வாய்ஸ் கால் மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது ஜியோ கணக்கில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவையை வாடிக்கையாளர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட விதிமுறைகள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை சார்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ இதுவரை வழங்கியுள்ள அறிவிப்புகளின் படி வாய்ஸ் கால் காலக்கெடு சார்ந்து எவ்வித தகவல்களும் இடம்பெறவில்லை. இதனால் ஜியோ சேவைகளை இந்த காலக்கெடுவிற்குள் எவ்வித இடையூறும் இன்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் ஜியோ சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் விதிக்கப்படவில்லை, என்றாலும் சில வாடிக்கையாளர்களுக்கு சேவைகளின் இடையே கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.