பெங்களூருவில் மிகக் குறைந்த விலையில் மலிவு விலை ஜியோ இட்லி கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவமான ஜியோ வந்ததிலிருந்து பல்வேறு புரட்சிகளை செய்து வருகின்றது. அடுத்தடுத்து ஜியோ பயனர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளை அளித்து, நாடு முழுவதிலும் ஜியோ என்ற பெயர் கேட்காதா ஆளே இருக்க முடியாது என்ற அளவுக்கு பெரும் பிரபலமானது.

இந்த வகையில், பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபெலபுரா பகுதியில், ரமேஷ் என்ற நபர் தொடங்கியுள்ள ஒரு இட்லி கடைக்கு ஜியோ இட்லி கார்னர் என பெயரிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு... ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் 70GB 4G டேடா, 70 நாட்கள் வேலிடிட்டி..!

ஜியோ சலுகை கொடுப்பதில் பெயர் பெற்றது என்பதைப் போல, ரமேஷ் என்பவர் ஆரம்பித்துள்ள இந்த இட்லி கடையிலும், மலிவு விலையில் அதாவது, 10 ரூபாக்கு 5 இட்லி கொடுத்து வருகின்றார்.

ரமேஷ் கூறியதாவது:
வீட்டிலேயே இட்லி அவித்து வந்து கடையில் விற்று வருகின்றேன். முதலில் வேறு பெயர் வைத்திருந்தேன். அதோடு, மக்களுக்கு குறைந்த விலையில், நல்ல தரமான இட்லியை வழங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது.

அப்போது, என் நண்பர் இந்த பெயரை பரிந்துரைத்தார். அதோடு, ஜியோ என்ற பெயர் அனைவரிடமும் நன்கு பரிட்சயமானது என்பதால், ‘ஜியோ இட்லி கார்னர்’ என பெயர் வைத்தேன். தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், ஞாயிறு அன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை என பகுதி நேரமாக நடத்தி வருகின்றேன்.

அதிகம் படித்தவை:  இணையம், விலை, வாய்ஸ் கால், இதரச் சேவைகள்... ஜியோவில் எவையெல்லாம் ஹிட்?

பெங்களூருவில் இந்த அளவுக்கு குறைந்த விலையில் யாரும் இட்லி வழங்குவது கிடையாது என்பதால், என் வியாபாரம் மிக நன்றாகவே போய்க்கொண்டிருக்கின்றது என கூறியுள்ளார்.