ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி இலவச சேவை வழங்கி வருகிறது. ஜியோ இலவச சிம் மூலம் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் பல கோடி வாடிக்கையாளர்களை ரிலைலயன்ஸ் தன் வசப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ அதிரடியால் வாடிக்கையாளர்களை இழந்து தவித்த ஏர்டெல் முதல் பி.எஸ்.என்.எல்.,வரை அனைத்து நெட் ஒர்க்குகளும்  போட்டி போட்டு தங்கள் கட்டணங்களை குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்ச் மாதத்துடன் இலவச சேவையை முடித்து கொண்டு, குறைந்த பட்சம் மாதம் 303 ரூபாய் வசூல் செய்ய ஜியோ முடிவு செய்தது. பின்னர் இந்த சேவையை மேலும் மூன்று மாதம் நீடித்தது.

பிற நெட் ஒர்க்குகளும்  கட்டண சலுகை வழங்கி வருவதால், ஜியோவிற்கு கடும் போட்டி ஏற்ப்பட்டுள்ளது. அதையடுத்து ஜியோ இலவச சேவையை மேலும் 18மாதம் நீடிக்க முடிவு செய்துள்ளதாக, ஜியோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.