fbpx
Connect with us

சூடுபிடிக்கும் ஜியோ 4ஜி: ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை முந்தியது

mukesh-ambani-jio

News / செய்திகள்

சூடுபிடிக்கும் ஜியோ 4ஜி: ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை முந்தியது

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இந்தியாவின் அதிவேக இண்டர்நெட் வசதியை வழங்கி வருகிறது. இந்த தகவல் டிசம்பர் 2016, வரையிலான தகவல்களை சார்ந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் அக்டோபர் மாதவாக்கில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேகம் இந்தியாவின் மிக குறைந்த இண்டர்நெட் வேகம் கொண்ட சேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிராயின் மைஸ்பீடு இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. மைஸ்பீடு இணையத்தளம் வழங்கும் தகவல்கள் ஒவ்வொருத்தர் பயன்படுத்தும் சேவைகளை விட நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் வேகத்தை சரிபார்க்க மைஸ்பீடு (Myspeed) தளத்திற்கு சென்று நெட்வொர்க் பகுதியில் ஜியோ தேர்வு செய்து தொழில்நுட்ப பிரிவில் 4ஜி என தேர்வு செய்தால் ஜியோவின் 4ஜி வேகத்தை அறிந்து கொள்ள முடியும். இதே போல் மற்ற நிறுவனங்களின் வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் அதிவேக 4ஜி இண்டர்நெட் வழங்கும் நிறுவனத்தை அறிந்து கொள்ள முடியும்.
அப்லோடு வேகத்தை பொருத்த வரை டெலிநார் நிறுவனம் நொடிக்கு 2.8 எம்பி என்ற வேகத்தில் முன்னிலை வகிக்கிறது, ஜியோ அப்லோடு வேகம் நொடிக்கு 2.6 எம்பியாக உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் புத்தாண்டு சலுகைகளை அறிவித்து தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வாய்ஸ்கால், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை மார்ச் 31, 2017 வரை இலவசமாக வழங்குகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்த அறிமுக சலுகையை தொடர்ந்து புத்தாண்டு சலுகை வழங்கப்படுகிறது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top