ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் குளோபல் கேம் சேஞ்சர் என்ற தலைப்பில் இரண்டாவது வருடாந்திர பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், 25 துணிச்சலான வணிகத் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் தொழில் துறைகளை மாற்றி உலகெங்கிலும் வாழும் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்தப் பட்டியலில் இந்தியர்களில் அம்பானியை தவிர வேறு யாருடைய பெயரும் இடம்பிடிக்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இப்போது வயது 60. ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் டாடா நிறுவனத்தின் டிசிஸ் பங்குகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 5 மாதத்தில் மட்டும் 7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அம்பானியின் சொத்து மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பதற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம், 2016-2017 நிதி ஆண்டு இறுதியில் ஜியோ நிறுவனம் 10.9 கோடி சந்ததாரர்களை பெற்றதே.

அம்பானி தனது புதிய உத்தியால் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பது மாற்றோர் சிறப்பு.