fbpx
Connect with us

Cinemapettai

விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.!

vijay sethupathi

News | செய்திகள்

விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.!

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்துச் சொன்னார்கள்.

Vijay-sethupathi

இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய வேளையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.

விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுங்கா கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார்.

விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார்.அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம்.

vijaysethupathy

‘காஷ்மோரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படம் ஜுங்கா.  சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஜுங்கா படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக நடிகை நேகா ஷர்மாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு அணுகியுள்ளது.

vijay sethupathy

இதற்கு நேகா ஷர்மா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. ஆனால் நேகா ஷர்மா தொடர்பான காட்சிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் காட்சியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Neha-Sharma

இரண்டாவது ஹீரோயின் ரோலில் நேகா ஷர்மா பாவடை தாவனி கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா படத்திற்குப் பிறகு இணைந்துள்ள விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணியில் உருவாகும் ஜுங்காவில் விஜய் சேதுபதி டான் ஆக நடிக்கிறார். யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top