Ravichandran Ashwin

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது அங்கு 3 T20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளில் 4 டெஸ்ட் தொடர் போட்டிகளும் அவர்களுடன் மோத இருக்கிறது.

IND VS AUS

இதில் முதலில் டி20 போட்டி தான் தொடங்குகிறது முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1 . 20 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியாவின் பின்ச், லின், மாக்ஸ் வெல் அதிரடியாக ஆடினர். அந்த அணி 16.1 ஓவர் 153/3 என இருக்கும் பொழுது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் நியூஸிலாந்தில் ஆல் ரௌண்டார் ஜிம்மி நீஷம் , ஏன் டிவியில் இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் ஒளிபரப்பாமல் ரக்பி ஓடுகிறது என கேட்டார்.

உடனே அஸ்வின் மழை பெய்கிறது நண்பா என பதில் தந்தார்.

அதன் பின் இணையத்தில் ஸ்கே கோர் செக் செய்துவிட்டு “சிக்ஸர்களாக கொட்டுகிறதா” என கிண்டல் செய்தார்.

அதற்க்கு நக்கலாக அஸவினும் “விரைவில் நாங்கள் பேட் செய்வோம்” என்றார். நீஷமும் “விராட் தான் ஆடுவாரே, எப்படியும் ஆட்டத்தை சுலபமாக முடித்துவிடுவார்.” என சரண்டர் ஆனார்.

எனினும் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் நீஷமிடம் பல கேள்விகளை கேட்க ஆரம்பிக்க மனிதர் படாத பாடு பட்டுவிட்டார்.

 

அதிகம் படித்தவை:  அடிச்சு சொல்றேன் இந்த வருஷம் இவங்க தான் சாம்பியன்: டிவிலியர்ஸ்!