அட இது தானா சேர்ந்த கூட்டம் மாதிரி தெரியல, திட்டம் போட்டு சேர்ந்த கூட்டம் தான்.

தானா சேர்ந்த கூட்டம்.

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் காமெடி நடிகர் செந்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.படத்தின் முதல் லுக் போஸ்டரும் ட்ரெண்டிங் ஆனது. “ஒரு பட்டாம்பூச்சிய, உட்டா பாருடா” என்ற பாடல் அனிருத் இசையில் வெளிவந்து ஹிட் ஆனது.

அனிருத்தின் பிறந்தநாள்:

அக்டோபர் 16 அனிருந்திற்கு 26 வயது முடிந்து 27 வயது தொடங்குகிறது. இவருக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து  தெரிவித்தனர். அந்த வரிசையில் சூர்யாவும் தன் பங்கிற்கு வாழ்த்தை கூறினார்.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனிருத். மகிழ்ச்சியாக இரு!! அணைத்து பெப்பியான பாடல்களுக்கும் நன்றி..! கலக்கு..!” என்று கூறிவிட்டு ‘சொடக்கு’ என்று தொடங்கும் பாடல் டீசரை வெளியிட்டுள்ளார்.

சொடக்கு மேல சொடக்கு போடுது :

அநேகமாக இந்தப் பாடல்  சூர்யாவின் ஓப்பனிங் சாங் ஆக தான் இருக்கும். இது பக்கா மாஸ் பாடல் வகையறா . இந்த லிங்கில் பாடலின் மேக்கிங் விடியோவும் உள்ளது. மேலும் அதில் பொது மக்கள் சிலர் சொடுக்கு போடுவது போலும் காட்சிகள் ஷூட் செய்துள்ளனர்.   சூர்யா மற்றும் தம்பி ராமய்யா, விக்னேஷ் சிவன் மேற்பார்வையில்  டான்ஸ் மாஸ்டருடன் ப்ராக்டிஸ் செய்கிறார்கள்.

#Suriya #TSK #ThaanaaSerndhaKoottam #ShootingSpot #sodakku

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

ஜிம்மிக்கி கம்மல் ஷெரில்

ஜிம்மிக்கி கம்மல் பாடல் வாயிலாக உலக பேமஸ் ஆனவர்கள் இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸின் பாகல்ட்டி களான ஷெரில் மற்றும் அன்னா, அவர்கள் இருவரையும் இப்பாடலில் சொடக்கு போடா வைத்துள்ளது படக்குழு.

https://www.youtube.com/watch?v=EUTV8kUQF_o

அதிகம் படித்தவை:  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய சீனா ஆர்வம்

இவர்கள் இருவரும் இருப்பதினால் அதி வேகத்தில் வைரலாகி வருகிறது இப்பாடல் டீஸர். அனிருத் இசையில் மணி அமுதவாணன், விக்னேஷ் சிவன் வரிகளில் அந்தோணி தாசன் இப்பாடலை பாடியுள்ளார்.

 

அதிகம் படித்தவை:  ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?