ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஜாக்கி சான்.

மலையாள படமான வெளிபாடிண்டே புஸ்தகம் படத்தில் வெளியான பாடல் ஜிமிக்கு கம்மல். இந்த பாடலுக்கு கல்லூரி மாணவிகள் முதல் சினிமா பிரபலம் முதல் அனைவரும் நடனமாடி அசத்தியுள்ளார்கள் இதை youtube இணையதளத்தில் ரசித்திருப்பீர்கள்.

jimiki

இந்த பாடலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை கிடைத்தது இது அனைவருக்கும் தெரியும்,சில நாட்களுக்கு முன் அபிஷேக் பச்சன் கூட  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று சொல்லிருந்தார்.

இப்படி இருக்க ரசிகர் ஒருவர் ஜாக்கி ஜான்  நடித்த ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் அவர் நடனமாடியுள்ளார் அந்த காட்ச்சியை எடுத்து ஜிமிக்கி கம்மல் பாடலுடன் எடிட் செய்து இணைத்து அதை  ஜிமிக்கி கம்மல் ஜாக்கி சான் வெர்சன் என்று வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.