ajith-vijayஎம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், வரிசையில் “விஜய் – அஜித்” ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகவே கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தாலும், இணைய வசதிகள் அதிகரித்தவுடன் அவர்கள் இருவரின் ரசிகர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலுமே மோதிக் கொள்கிறார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் நடித்த “ஜில்லா”வும், அஜித் நடித்த “வீரம்” படமும் 2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகின. அந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. “ஜில்லா, வீரம்” படம் பற்றி அவர்களது ரசிகர்கள் அன்று கிளப்பிய சூடான விவாதம், மோதல்கள் கண்டிப்பாக இன்றும் நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிகம் படித்தவை:  தாய் பாசத்தை திரையில் உண்மையாக காண்பித்த ரீல் அம்மாக்கள்!

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே மோதலை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்த பெருமை மட்டுமே “ஜில்லா, வீரம்” ஆகிய படங்களுக்கு உண்டு. மற்றபடி அந்த இரண்டு படங்களும் அவர்களின் சிறந்தப் படங்களின் பட்டியலில் இடம் பெறும் அளவிற்குத் தகுதியான படங்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை

அதிகம் படித்தவை:  Kanithan Official Trailer