fbpx
Connect with us

Cinemapettai

ட்ரென்ட் ஆன ஜில்லா.. அதெல்லாம் சரிதான்.. அதற்கு அஜித் ரசிகர்கள் கேட்ட ஒரே கேள்வி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்ரென்ட் ஆன ஜில்லா.. அதெல்லாம் சரிதான்.. அதற்கு அஜித் ரசிகர்கள் கேட்ட ஒரே கேள்வி

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் வெளிவருவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் அவ்வப்போது அந்த விஷயங்களும் நடைபெற்று தான் வருகின்றன. கடந்த வருட பொங்கல் வெளியீடாக ரஜினி மற்றும் அஜித் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஜில்லா படமும் தல அஜித் நடித்த வீரம் படமும் ஒரே தேதியில் வெளியானது. வழக்கம்போல் இரு தரப்பு ரசிகர்களும் எங்கள் ஹீரோவின் படம் தான் வெற்றி பெற்றது என சமூக வலைதளங்களில் சண்டைபோட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் எந்த படம் வெற்றி பெற்றது என்பது அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இரண்டு படங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஒரு இயக்குனராக ஜெயித்தது வீரம் படத்தை சிறுத்தை சிவா தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து படம் இயக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளார். சில படங்களில் தோற்றாலும் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியை தொடர்ந்து செய்ததால் அவருக்கு இந்த உயரம் கிடைத்துள்ளது.

ஆனால் நேசன் ஜில்லா படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் இயக்கவில்லை. அவர் அதற்கு முயற்சி செய்ததாகவும் தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் நேற்று #6YrsOfPongalWinnerJILLA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

இதனால் நெட்டிசன்கள் தற்போது வீரம் சிவா இங்கே, ஜில்லா நேசன் எங்கே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருமே தங்களது துறைகளில் சிறந்தவர்களாக உயர்த்திக் கொள்ள அவர்கள் படாத கஷ்டம் இல்லை என்பது அவரவர் ரசிகர்களுக்கே தெரியும்.

இருந்தும் போட்டி போட்டுக் கொள்வது சரியல்ல. சந்தோசமாக படங்கள் பார்ப்பது காணாமல் போய், தற்போது எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என கணக்குப் போட ஆரம்பித்து விட்டோம்.

முதல்ல இந்த ட்ராக்கர்ஸ் பேருல வசூல் சொல்றவங்கல உருட்டுக்கட்டையால் அடிக்கணும்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top