fbpx
Connect with us

TRPயில் ரஜினியின் பேட்ட படத்தை வீழ்த்திய விஜய்யின் பழைய படம்.. தலைவரின் மவுசுக்கு என்ன ஆச்சு?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

TRPயில் ரஜினியின் பேட்ட படத்தை வீழ்த்திய விஜய்யின் பழைய படம்.. தலைவரின் மவுசுக்கு என்ன ஆச்சு?

ஒரு துறையை தேர்ந்தெடுத்து அந்த துறையில் 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அதை அனாயசமாக செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நாற்பது வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ரஜினிகாந்தின் மார்க்கெட்டில் சிறிது குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அதற்கு உதாரணமாக பேட்ட, விஸ்வாசம் மோதலை கூறலாம்.

சமீப காலமாக வெளிவரும் ரஜினியின் படங்களை அதிக அளவில் மக்கள் விரும்புவதில்லை என்பது அவரது படங்கள் டிவியில் ஒளிபரப்பப்படும் போது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது.

தியேட்டர்களில் இன்னும் கில்லியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைக்காட்சிகளில் கொஞ்சம் சறுக்கி விட்டார். பழைய படங்களுக்கு இருக்கும் வரவேற்பு ரஜினியின் புதிய படங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் கடந்த வாரத்தில் ரஜினியின் பேட்ட படமும், விஜய்யின் ஜில்லா படமும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் விஜய்யின் ஜில்லா படம் ரசிகர்கள் பலரால் பார்க்கப்பட்டுள்ளது.

TRP-Ratings

TRP-Ratings

ரஜினியின் படையப்பா, முத்து, அருணாச்சலம் போன்ற படங்களுக்கு இருக்கும் வரவேற்பு சமீபத்திய படங்களுக்கு இல்லை. இந்த வார டிஆர்பி ரிப்போர்ட் ரசிகர்களிடையே கிச்சு கிச்சு மூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top