fbpx
Connect with us

இடியாப்ப சிக்கலாய் சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் திரில்லர் – ஜீவி திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

இடியாப்ப சிக்கலாய் சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் திரில்லர் – ஜீவி திரைவிமர்சனம்.

8 தோட்டாக்கள் படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் மற்றும் ‘பிக் பிரின்ட் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ஜீ வி.

வெற்றி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கதை, வசனத்தை பாபு தமிழ் எழுதியுள்ளார், அறிமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத். சுந்தரமூர்த்தி இசை.

கதை – தன் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடிக்காமல், வீணாக ஏரியா நண்பர்களுடன் சேர்ந்து லந்து கொடுக்கும் கதாபாத்திரம் தான் ஹீரோ வெற்றி. குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வேலை தேடி வருகிறார்.

ஜூஸ் போடுபவராக வெற்றி, அதே கடையில் டீ மாஸ்டராக கருணாகரன். இவ்விருவர் தங்கி இருப்பது ரோஹிணியின் வீட்டில். அந்த வீட்டில் பக்கவாதம் வந்த கணவர், பார்வையற்ற மகள், அவளின் கல்யாணம் நெருங்கும் சமயம் என ஒவ்வொன்றாக  நாவல் பாணியில் நம் கண்முன்னே படர்கிறது.

அந்த வீட்டில் உள்ள நகையை திருடி, பக்கத்து ரூம் இப்ராஹீமை மாட்டிவிட திட்டம் போடுகின்றனர் இந்த இருவரும். செய்லபடுத்தும் சமயத்தில், வெற்றியின் அப்பா இறக்க நேரிடும் சூழலிலும் திட்டத்தை நிறைவேற்றி விடுகின்றனர். போலீசிடம் இருந்து அழகாக தப்பித்தாலும் விதியின் வசம் இருந்து தப்பமுடியாமால் செல்லும் சூழல் வருகின்றது.

நிறைய புத்தகங்களை படிக்கும் ஹீரோ வெற்றி, இந்த சம்பவத்தில் உள்ள “தொடர்பியலை” கண்டு பிடிக்கிறார். (இதற்கு மேல் கதையை சொன்னால் படத்தின் சஸ்பென்ஸ் வீணாகிவிடும்.) எனினும் விதியை மதியால் வென்றாரா, அல்லது விதியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபினம் ஆனாரா என்பதே மீதி கதை.

அலசல் – உலகத்தரத்தில் படத்தை எடுக்கிறேன், என பலர் சுற்றி வரும் சூழலில், நம் உள்ளூர் ஆட்களை டார்கெட் செய்து படம் எடுத்த இந்த டீமுக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ். சாமணியனாக இருந்தாலும் ஹீரோ, எந்தளவுக்கு தன் உள்ளணர்வை பயன்படுத்துகிறான் என ஆரம்பித்திலேயே நம்மக்கு புரியவைத்ததால், முக்கோணம் கான்செப்ட், துப்பறிவது என அவர் செய்யும் அனைத்திலும் எதார்த்தத்தை படம் பார்க்கும் நம்மால் உணர முடிகின்றது.

வெர்டிக்ட் – இன்றைய பாஸ்ட் டி 20 உலகில், டெஸ்ட் மேட்சில் விறுவிறுப்பான கூட்டினால் எப்படி இருக்கும், அப்படி ஒரு தரமான படமே இந்த ஜீவி. குறைவான பட்ஜெட் எனினும் தெளிவான எழுத்து மற்றும் திரைக்கதையே இப்படத்தின் பிளஸ். பல நேரங்களில் இது படமா அல்லது நம் கண்முன் நிஜமாக நடக்கும் நிகழ்வா என தெரியாத அளவுக்கு நம்மை படத்தில் ஐக்கியமாகிவிட்டனர் இவர்கள்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top