fbpx
Connect with us

தனுஷ்,வெற்றிமாறன் பதிலுக்காக காத்திருக்கும் ஜீவா

News | செய்திகள்

தனுஷ்,வெற்றிமாறன் பதிலுக்காக காத்திருக்கும் ஜீவா

jiiva-vada-chennaiஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’, திருநாள்’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஜீவா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து கருத்து கூறிய ஜீவா, ‘இந்த படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தனுஷும், இயக்குனர் வெற்றிமாறனும் என்னை அணுகியது உண்மைதான். ஆனால் இந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. நான் இந்த படத்தில் நடிக்க தயாராக இருந்தாலும் நான் நடிக்கின்றேனா? இல்லையா? என்பதை தயாரிப்பாளரும் இயக்குனரும்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘கொடி’ படத்தை முடித்தவுடன் தனுஷ், கவுதம்மேனன் இயக்கும் ‘எனை நோக்கி வரும் தோட்டா’ படத்தில் நடிக்கவுள்ளதால் ‘வடசென்னை’ படம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top