Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா!
Published on
ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கலகலப்பு -2 அந்த படம் காமெடியை மையமாகக் கொண்டது, இருப்பினும் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் போன்ற படங்களும் பேசும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
நடிகர் ஜீவா நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜீவா தற்போது மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறினார். கி, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்கள் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
