நடிகர் ஜீவா நடிக்கும் 29-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பன்சி வகை குரங்கு நடிக்கவுள்ளது. ஜீவா தற்பொழுது கீ, கலகலப்பு 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். வித்தியாசமான முயற்சியை வரவேற்கும் ஜீவாவின் புது படத்திற்கு ‘கொரில்லா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
jeeva_cinemapettai
‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி இயக்கம் இப்படத்தில் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஆர். ஜே . பாலாஜி மற்றும் யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் பணியாற்ற உள்ளனர்.

shalini pandey

இந்த படத்தை “ஆல் இன் பிக்சர்ஸ்” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். திருட்டு, கொள்ளையடிப்பது போன்றவையை பின்புலமாகக் கொண்ட காமெடி அது இந்த கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது கொரில்லா.
kong


தமிழ் சினிமாவில் முதல் முறையாக பயிற்சியளிக்கப்பட்ட ரியல் சிம்பன்சியை வைத்து படமாக்கவுள்ளார்கள். இந்த சிம்பன்சி தாய்லாந்தில் புகழ்பெற்ற விலங்குகள் பயிற்சி கொடுக்கும் ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் ட்ரைனிங் கொடுக்கப்பட்டுவருகிறது. கடந்த நான்கு மாதமாக இந்த “காங்” குரங்கிற்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

‘ஹேங்ஓவர்-2’ , ‘ப்ளேனட்ஸ் ஆஃப் தி ஏப்ஸ்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த விலங்குகளுக்கு இந்த சாமுட் மையம் தான் பயிற்சி கொடுத்துள்ளது.

ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 22-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் தாய்லாந்தில் நடக்கவுள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்
மெர்சல் படம் சென்சார் போர்டில் பட்ட பாடு நாம் அறிந்த விஷயமே. இருப்பினும் துணித்து இத்தகைய நேரத்தில் இது போன்ற புது முயற்சியை எடுக்கும் படக்குழுவை கட்டாயம் பாராட்டி தான் ஆக வேண்டும்