Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் ஹிட் அடிக்கும் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக்.. அடுத்த வெற்றியை தக்க வைப்பாரா ஜீவா?
ராஜு முருகன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். இவரின் படைப்புக்களான வட்டியும் முதலும், ஜிப்ஸி போன்றவை பெரும் வரவேற்புகளை பெற்றது. தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டில் குக்கூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இரண்டு கண் பார்வையற்றவர்களின் வாழ்க்கையை முழுக்க முழுக்க பாசிடிவ் அம்சங்களுடன் சொன்னதால் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, சமகால அரசியலை வைத்த படம் ஜோக்கர். இப்படத்திற்கு போதுமான வசூல் கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான 64வது தேசிய விருதை இப்படம் பெற்றது.
தொடர்ந்து, ராஜு முருகன் தமிழ் சினிமாவில் தனது பணியை தொடந்து வந்தார். வர்மா உள்ளிட்ட சில தமிழ் படங்களுக்கு வசனம் எழுதி வருவதில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து, மூன்றாவது படமாக ஜிப்ஸி உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். நடாஷா சிங் நாயகியாக அறிமுகமாகிறார். ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் ‘ஜிப்ஸி’ படத்தைத் தயாரிக்கிறார். குக்கூ, படத்தை அடுத்து மீண்டும் ராஜுமுருகனுடன் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்து இருக்கிறார்.

Gypsy FLP

Gypsy FLP
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் இன்று (6 ஜூன்) நள்ளிரவு 12.01 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையாக இப்படம் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா திரை வாழ்வில் இப்படம் வித்தியாசமான மைல்கல்லை பதிக்கும் என்கிறது கோலிவுட் தரப்பு.
