jeeva gurillea movie

கொரில்லா

ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ், யோகி பாபுவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் பணியாற்ற உள்ளனர்.

jeeva sathish @ bangkok

படத்தை “ஆல் இன் பிக்சர்ஸ்” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். சிம்பான்ஸி வகை குரங்கை வைத்து திருட்டு, கொள்ளையடிப்பது போன்றவையை பின்புலமாகக் கொண்ட காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது கொரில்லா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் பேங்க்காக்கில் தொடங்கியது.

அதிகம் படித்தவை:  தெலுங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் ரிசல்ட் என்ன ?
Shalini Pandey

மேலும் படத்தில் ‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாம். இந்த சிம்பன்சி தாய்லாந்தில் புகழ்பெற்ற விலங்குகள் பயிற்சி கொடுக்கும் ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் ட்ரைனிங் செய்யப்பட்டதாம்.

அதிகம் படித்தவை:  மனோஜ் ஷ்யாமளானின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ திரில்லர் படம் கிளாஸ் - புதிய ட்ரைலர் .
jeeva gurellia 2

Shooting Spot

இந்நிலையில் தாய்லாந்தில் ஷூட்டிங் முடிந்து விட்டதாக தன் ட்விட்டரில் ஜீவா தெரிவித்துள்ளார்.