Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் ஸ்ரீகாந்த் போலவே ஜீவா.. லைக்ஸ் அள்ளுது 83 பட புதிய போஸ்டர்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இவர் தலைமையில் தான் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இதனை மையப்படுத்தி கபீர்கான் படத்தை இயக்கி வருவது தான் 83 படம்.
கபிலாக ரன்வீர் சிங் நடிக்கிறார். ஏற்கனவே அவர் அச்சு அசல் கபில் போல இருந்த போட்டோ வைரலானது. இப்படத்தில் அதிரடி ஒபெநிங் பேட்ஸ்மான் க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரோலில் முதலில் விஜய் தேவர்கொண்டா நடிப்பதாக பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் அந்த வாய்ப்பு ஜீவாவுக்கு சென்றது. ஜீவா அவர்கள் ஸ்ரீகாந்தின் பேட்டிங் ஸ்டேன்ஸில் உள்ள போட்டோவை நேற்று படக்குழு வெளியிட்டது.

Jiiva as Srikanth in 83
ஆறு வித்தியாசம் ஸ்ரீகாந்த் அவர்களால் கூட கண்டு பிடிக்க முடியாது போலயே …
