ஜிக்னேஷ் மேவானி

குஜராத் தேர்தல் களத்தில் சுயேட்சையாக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி வாகை சூடியவர். நாடறிந்த தலித் செயல்பாட்டாளர்! ஜிக்னேஷ் மேவானி சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். குஜராத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தால் அனைவராலும் கவனிக்கவைத்தவர்.

jignesh mevani

ஜிக்னேஷ் மேவானியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்திலும் தலித் செயல்பாட்டாளர்கள், பெரியாரிஸ்ட்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்தச் சூழலில் பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்திற்கு விசிட் அடித்தார் ஜிக்னேஷ் மேவானி. இங்கு பல நிகழ்ச்சிகளில்  பங்கேற்றார் .

பா. ரஞ்சித்

kabali-rajini-ranjith
Pa.Ranjith

லிங்குசாமி, வெங்கட் பிரபுவின் சீடர். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்களின் வாயிலாக முன்னணி அந்தஸ்தை பெற்றவர். இவர் தற்பொழுது ரஜினியின் காலா படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் இருவரும் பொங்கலன்று சந்தித்துப் பேசியுள்ளார். பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தன் அடுத்த படத்தில் நடிக்க பா.ரஞ்சித் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Jignesh Mevani & Pa Ranjith

மேவானி தான் ரஞ்சித்திடம் இந்த சினிமாவில் நடிப்பதை பற்றி கேட்டுள்ளார். ரஞ்சித் அவர் பெர்சோனாலிட்டிக்கு ஏற்றார் போல் கதாபாத்திரம் தருகிறான் என்று ஓகே சொல்லியுள்ளார். அதை அவர் உடனே ஏற்றுக்கொண்டுள்ளதால் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

jignesh mevani

ஜனவரி 16-ம் தேதி சென்னையில் பிரஸ் மீட்டில் குறிப்பிட்ட ரிபப்லிக் என்ற ஆங்கில சேனல் ஒன்றை அவர் புறக்கணிக்க விரும்பியதும், அந்த சேனல் மைக்கை மட்டும் பிரஸ் மீட்டில் இருந்து அகற்றக் கூறியதும் அப்பொழுது பலத்த சர்ச்சைக்கு காரணம் ஆனது.