Tamil Cinema News | சினிமா செய்திகள்
நானும் “காலா” தான் ! ரஞ்சித்தை பாராட்டிய குஜராத்தின் பிரபல தலித் எம்.எல்.ஏ !
ஜிக்னேஷ் மேவானி
குஜராத் தேர்தல் களத்தில் சுயேட்சையாக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி வாகை சூடியவர். நாடறிந்த தலித் செயல்பாட்டாளர். ஜிக்னேஷ் சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.

jignesh mevani
குஜராத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தால் பிரபலமானவர். ஜிக்னேஷ் மேவானியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்திலும் தலித் செயல்பாட்டாளர்கள், பெரியாரிஸ்ட்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
காலா
இந்நிலையில் ஜிக்னேஷ் காலா படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Do watch P. Ranjith's #Kaala :
Watched Kala yesterday and felt that I am also a Kala. Very good film. Our brother @beemji (also director of Kabali) has come up with one more very good film challenging the established order in many subtle yet entertaining way. Proud of Pa. Ranjith pic.twitter.com/67eBv5MGT3— Jignesh Mevani (@jigneshmevani80) June 11, 2018
” கண்டிப்பாக ரஞ்சித்தின் காலா படத்தை பாருங்கள். நேற்று தான் தான் காலா படம் பார்த்தேன். நானும் காலா என்றே எனக்கு தோன்றியது. மிக சிறப்பான படம். நம் சகோதரர் ரஞ்சித் (கபாலி படத்தையும் இயக்கியவர்) மீண்டும் ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளார். சிலரின் ஆதிக்கத்தை மிகவும் நுட்பமாகவும், அதே சமயமயம் பொழுது போக்கு அமசத்துடனும் படத்தை எடுத்துள்ளார். உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Pa Ranjith
ரஞ்சித்தும் தன் நன்றியை தெரிவித்தார்.
Thank you brother https://t.co/U1xOWJjo7M
— pa.ranjith (@beemji) June 11, 2018
