ஜிகர்தண்டா படம் தான் பாலிவுட்டில் ரிமேக் செய்யப்போகிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் 2014ல்  வெளியான படம் ‘ஜிகர்தண்டா. இந்தப்படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது இப்படம்.

இப்படம் ஹிந்தியில் ரீமேக்கில் செய்யப்படவுள்ளது. படத்தை இந்தி நடிகர் அஜய் தேவகன் தயாரிக்கிறார். படத்தை நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். .சித்தார் ரோலில் பர்கான் அக்தர் நடிக்க, லட்சுமி மேனன் ரோலில் தமன்னா, பாபி சிம்ஹாவாக  சஞ்சய் தத் நடிக்கிறார்கள்.

தமிழில் மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும். ஹிந்தியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தை பின் புலமாக கொண்டு கதை அமைக்கப்டுகிறதாம். மேலும் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றார் போல சில மாறுதல்களையும் செய்துள்ளார்களாம்.

விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஜிகர்தண்டா இந்த கொரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்படம் பாலிவுட் செல்வது ஆச்சர்யம் தான்.