கபாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் விஜய்.

இவர் கபாலி படத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.இதில் இவர் நடித்த பில்லா படத்தை பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இதில் ‘அஜித் சார் தங்கமான மனிதர், ஒரு முறை படப்பிடிப்பில் எனக்கு அடிப்பட்டு இருந்தது, அப்போது யாரும் அதை கவணிக்கவில்லை, அஜித் அதை கவணித்து முதலில் ரெஸ்ட் எடுங்க’ என்றார். அவர் படப்பிடிப்பில் எல்லோரையும் பார்த்துக்கொள்ளும் விதம் மிகவும் பிடிக்கும்.

அதேபோல் கபாலி படப்பிடிப்பின் போது சென்னை வெள்ளத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் சூப்பர் ஸ்டாருடன், அப்போது நான், ஏன் குளத்தில் வீடுக்கட்ட வேண்டும் என்று கேட்க, ரஜினி சார் ஒரு நிமிடம் கோபமாக என்னை பார்த்து அப்படியெல்லாம் பேசாதீங்க, அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும்’ என்றார், இப்படி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.